பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மார்ச் 5ஆம் நாள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி
சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தொல். திருமாவளவன் அறிக்கை


இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அதனை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 5Š3Š2010

காலை 11 மணி அளவில் சென்னை, அரசு பொது மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், பொதுமக்களும் வெகுவாகப் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுவிக்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

1 கருத்துகள்:

i am welcoming the awards the leaders(men) who are fought for the oppressed and depressed people at the same time we are speaking about 50% equal rights to women. so the party should make the award in the name of women. who are all fought for the oppressed and depressed people.

14 மார்ச், 2010 அன்று 11:23 PM comment-delete

கருத்துரையிடுக