நிதி அறிக்கையில் சாதனைத் திட்டங்கள்

நிதி அறிக்கையில் சாதனைத் திட்டங்கள் : முதல்வர் கலைஞரை மக்களின் நெஞ்சம் ஈர்த்த மாமனிதராக உயர்த்தும் 
தொல். திருமாவளவன் அறிக்கை

புதிய சட்டப் பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (19-03-2010) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டி எழுப்பப்பட்டு அதில் முதல்முதலாய் சட்டப் பேரவை கூடியுள்ளதும், முதல் கூட்டத்திலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதும் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் போற்றுதலுக்குரிய சிறப்பு நிகழ்வாகவும், மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும் பெரும் புகழை ஈட்டித்தரும் சாதனையாகவும் அமைந்துள்ளது.





இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பாராட்டுதலுக்குரிய எண்ணற்ற திட்டங்களை அறிவித்திருப்பது பெரும் பூரிப்பை அளிக்கிறது. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின்கீழ் 3,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும், கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படுகிற வெள்ளச் சேதங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், பலகோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்திருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

மேலும் உடல் ஊனமுற்றோர் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையை உருவாக்குவது, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது, அனைத்து அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு கட்டண விலக்கு அளிப்பது, விழுப்புரத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது, ஒவ்வொரு ஊராட்சியிலும் சமூகக் கூடங்களை அமைப்பது போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்து மாபெரும் சாதனையாளர் என்பதை மீண்டும் நிறுவியுள்ளார்.

ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் தமிழக மக்களிடம் பெருமதிப்பையும் பாராட்டுக்களையும் ஈட்டித் தந்துள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களை ஒப்புயர்வற்ற மகத்தான சாதனையாளராக, மக்களின் நெஞ்சம் ஈர்த்த மாமனிதராக உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

தமிழக அரசின் இந்த நிதிநிலைஅறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் மனமாரப் பாராட்டி வரவேற்கிறது.

இவண்


(தொல். திருமாவளவன்)
-

1 கருத்துகள்:

விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின்கீழ் 3,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது-பாராட்டுக்குரியது !!!!



நான் இங்கே சில கருத்துக்களை சொல்ல நெனைக்கிறேன்!!

-ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் -தாழ்த்தபட்டவர்களின் முன்னேற்றத்திற்கு செய்த சில திட்டங்களை பற்றி -சில உண்மைகளை சொல்ல ஆசைபடுகிறேன்

1.ஆதிதிராவிடர் மாணவிகள் -விமான பணிப்பெண்கள் பயிற்சி -:-
400 மாணவிகள் தேர்ந்து எடுத்து 4 கோடி செலவு செய்த திட்டம்

பலன் :

ஒருவரும் (No One )விமான பணிப்பெண்ணாக தேர்வு செய்யப்படவில்லை

௨.ஆதிதிராவிடர் மாணவ /மாணவிகள் -வெளிநாட்டில் படிக்க பண உதவி :-
10 மாணவ /மாணவிகள் -ஒரு வருடதிற்கு -வெளிநாட்டில் சென்று படிக்க ஆகும் மொத்த செலவையும் ஏற்று கொள்ளும் திட்டம்

பயன்பெற்றவர்கள் : கடந்த பல வருடங்களாக யாரும் இல்லை

2.செவிலிய பயற்சி :-

பத்தாவது படித்த மாணவிகள்- ஒரு வருட பயற்சி

குறைகள் :-தமிழ்நாடு தாதியர் மற்றும் செவிலியர் குழுமம்-(Tamil Nadu Nurses & Midwives Council)-ஒன்றரை வருடம் செவிலிய பயற்சி படிப்பை தான் -பலநோக்கு சுகாதார பணியாளர்களாக-(ANM\MPHW-)அங்கிகரிக்கிறது


இவர்கள்தான் -அரசு மருத்துவ மனைகளில் -பலநோக்கு சுகாதார பணியாளர்களாக(பெண்கள்) ANM\MPHW பணியாற்ற முடியும் !!

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்-செவிலிய பயிற்சி பெற்றவர்கள் பணியாற்ற முடியாது ,ஏன் எனில்- ஆதிதிராவிடர் நலத்துறை -ஒரு வருட பயற்சி தான் தருகிறது !!!

கடந்த மாதம் அறிவித்த -அரசு மருத்துவ மனைகளில் -பலநோக்கு சுகாதார பணியாளர்-காலி இடங்களில் ,ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்-செவிலிய பயிற்சி பெற்றவர்கள் போட்டி இட முடியாது !!!!




அரசு என்ன திட்டங்கள் போட்டாலும்-போதுமான -நிதி ஒதுகீனாலும் -திட்டங்ளை -தீட்டி-செயல்படுத்துகிற -அதிகாரிகளின் -அமைச்சர்களின் -செயல்பாட்டில் தான் ஒரு திட்டம் -வெற்றி பெரும் !!!



இதற்கு என்ன தீர்வு ?

1.செயல் படுதுக்கின்ற அதிகாரி ஆதிதிராவிடர் மக்கள் மீது -உண்மையான -அக்கறை -உளவராக-இருக்க வேண்டும் !!!-எனக்கு தெரிந்து -கிருசுதாஸ் காந்தி-1AS,

2.அணைத்து திட்டங்கள் பற்றி விளம்பரங்கள் -ஆறு மாதத்திற்கு ஒருமுறை-செய்தி தாள்களில் வரவேண்டும்

3. கண்காணிப்பு குழு ஒன்று -சமுக நல ஆர்வலர்கள்- அமைக்கப்பட வேண்டும்-அது ஆறு மாதத்திற்கு ஒருமுறை-வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்

தோழர் -திருமா அண்ணார், தோழர் -ரவிக்குமார் போன்றவர்கள்
முதல்வரிடம் சொல்லி இதற்க்கு -தீர்வு காண -மன்றாடி வேண்டுகி றேண்

த சேகர் M.E
மருதிட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்

rousesekar@gmail.com

27 மார்ச், 2010 அன்று 12:14 AM comment-delete

கருத்துரையிடுக