6 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்!

களப்பணி ஆற்ற இயலாத 6 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்! புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு!
தொல். திருமாவளவன் அதிரடி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம், ஒன்றியம், நகரம் அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனங்களும் நடந்தேறி வருகின்றன. அத்துடன், தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கமும் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு ஆராய்ந்து அளித்த ஆய்வறிக்கையின்படி ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முற்றிலும் களப்பணி ஆற்ற இயலாதவர்களும் களப்பணிக்கு ஒத்துழைக்காதவர்களும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீலமலை, தர்மபுரி, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை புறநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாற்றாக, நீலமலை மாவட்டச் செயலாளராக சகாதேவனும், தர்மபுரி மாவட்டச் செயலாளராக மாரவாடி இராமனும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக வில்லவன் கோதையும், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இளையான்குடி கோபாலும், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக எம்.சி. கார்த்திக்கும், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக செயக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இரா.கிட்டு மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மங்கலம் கருப்பையா என்கிற கவியரசன் ஆகியோர் கட்சி மற்றும் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அண்மைக் காலமாக தலைமையிலிருந்து உரிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கைகள் செய்தும் அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் செயல்பட்டு வந்ததனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஆறு மாத காலத்துக்கு இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் கட்சித் தலைவரை அணுகாமல், மையக்குழுவையே நாட வேண்டும்.
நாடெங்கிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவரும் சூழலில் அப்பணிகளை முடக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறது.

இவண்
(தொல். திருமாவளவன்)
-

1 கருத்துகள்:
Dear sir, very good. we will achieve all things in this world.
Thank you. Continue your hard work.
Thank you bro.
கருத்துரையிடுக