பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து வேண்டுகோள்


பார்வதி அம்மையாருக்கு மருத்துவ உதவி முதலமைச்சரைச் சந்தித்து எழுச்சித்தலைவர் தொல். திருமாவளவன்,
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, , பேரா. சுப.வீ. வேண்டுகோள்


26.4.2010, 8 மணியளவில் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவர்தம் இல்லத்தில், பக்கவாத நோயால் அவதிப்படும் 81 வயது மூதாட்டியான அன்னை பார்வதி அம்மாள் அவர்களை மீண்டும் மலேசியாவிலிருந்து இங்கே வந்து உரிய சிகிச்சை பெற, அவர்களிடமிருந்து கடிதம் வரும் நிலையில், மத்திய அரசுக்கு எழுதி அனுமதித்து ஆவன செய்யவேண்டும் என்பதை ஒரு மனுமூலம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து வேண்டுகோள் மனு ஒன்றை அளித்து, சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய கருத்துகள் அடிப்படையில் ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.


முதல்வர் அவர்கள் மனுவைப் பெற்றுக்கொண்டு, பார்வதி அம்மா அவர்களிடமிருந்து கடிதம் வந்தால், அதற்குரிய அனுமதி ஏற்பாடுகளை மத்திய அரசுடன் பேசி செய்வதாக இணக்கமாகக் கூறினார்கள்.


மூவரும் நன்றி தெரிவித்து, சிறிது நேரம் உரையாடி விடை பெற்றனர்.
-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக