லோக்பால் மசோதா தொடர்பாக புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் திருமா

SPEECH OF THOL.THIRUMAVALAVAN IN THE ALL PARTY MEETING HELD ON 28-08-2011 AT THE PRIME MINISTERS RESIDENCE, ON LOKPAL ISSUE


Honourable  Prime Minister and all other Leaders,Thank you for this opportunity.

The Main Problem now is, how the government is going to end the struggle of the Team Anna Hazare. It is getting blown-up day by day with the support of public. This is the big challenge to the government as of today.

We know very well that there are many burning issues in our country to be solved like poverty, corruption, terrorism and all discriminations in the name of caste and community.

The people who are called Dalits are facing attrocities in all means all over the country each and every minute. No one is ready to come forward to consider this as a problem to be solved. More than 2000 years, such discriminations and attrocities are continuing against the Dalits and all other working  people. Is there any Athma, or Mahathma ready to die for annihilation of caste in our country?

Any how, I have to appreciate the people who are struggling to eliminate the corruption now. But the way of approach,like dictating the Parliament is not fair. The supremacy of the Constitution and Parliament must be maintained by the government. Hence I request the government to take strong steps to end the struggle of Anna Hazare. The representatives of the people are the ones to finalise this issue. This is the representative democracy. If the Government encourages this type of approach, it will be a great insult to the Constitution, parliament ,democracy and to the architect of the Constitution, Dr.B.R.Ambedkar.

Finally, I would like to suggest that the demands of the Team Anna Hazare are not to be neglected. The Government should consider their demands without diluting the supremacy of Parliament. There is no need to withdraw the Raj Lokpal Bill. But the Government should  take necessary steps like deletions and additions to the Lokpal Bill which was introduced in the House, to make it strong and effective. 


Thank you once again.


தமிழ் வடிவம்

24.8.2011 அன்று லோக்பால் மசோதா தொடர்பாக புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது

மாண்புமிகு தலைமை அமைச்சர் அவர்களே, அனைத்து கட்சித் தலைவர்களே வணக்கம் இந்த அரிய வாய்ப்புக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னா அசாரே குழுவினரின் போராட்டத்தை அரசு எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது தான் தற்போதைய முதன்மையான சிக்கலாக உள்ளது. பொதுமக்களின் பேராதரவுடன் அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது. இன்றைய நிலையில் அரசுக்கு இதுவே மிகப்பெரும் சவாலாக உள்ளது. 

நமது நாட்டில் வறுமை,ஊழல்,பயங்கரவாதம் மற்றும் சாதி,மதம் ஆகியவற்றின் பெயரால் நடக்கும் ஓரவஞ்சனைகள் போன்ற தீர்வு காணப்படவேண்டிய எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன என்பதனை நாம் அறிவோம் .குறிப்பாக தலித் மக்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து வகையிலுமான வன்கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ள யாரும் முன்வரத் தயாராக இல்லை .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய ஓரவஞ்சனைகள், வன்கொடுமைகள், தலித் மக்களுக்கும், பிறஉழைக்கும் மக்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நாட்டில் சாதியை ஒழிப்பதற்காக யாரேனும்ஒரு சாதாரண ஆத்மாவோ அல்லது மகாத்மாவோ இருக்கிறர்களா? எனினும் ,தற்போது ஊழலை ஒழிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், நாடாளுமன்ற அவைக்கு ஆணையிடும் வகையில் நடந்துகொள்ளும் முறை ஏற்புடையதல்ல. 

அரசியலமைப்பு சட்டத்திற்கான உச்சநிலை அதிகாரம் அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் .எனவே அன்னா அசாரேவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலுவானதொரு முடிவை எடுக்கவேண்டுமென அரசை கேட்டுகொள்கிறேன். 

மக்களின் பிரதிநிதிகளே இத்தகைய பிரச்சனைகளை இறுதி செய்ய வேண்டும் இதுவே பிரதிநிதித்துவ சனநாயகமாகும். மாறாக அரசு இத்தகைய நடைமுறைகளை ஊக்க்பப்படுத்தினால் அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் சனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் செய்கிற அவமதிப்பாக அமையும் .

நிறைவாக, அன்னா அசாரே குழுவினரின் கோரிக்கைகள் எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல என்பதை சொல்ல விரும்புகிறேன். நாடாளுமன்றத்தின் உச்சநிலை அதிகாரம் நீர்த்துப்போகாதவகையில் அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசிலிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவை திரும்பபெறவேண்டிய தேவையில்லை . ஆனால் அம்மசோதாவை வலுவுள்ளதாகவும், பயனுள்ளதாகவும், அமையக்கூடிய வகையில் நீக்கல் மற்றும் சேர்த்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் .

நன்றி 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக