பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரை காப்பாற்றுக - குடியரசு தலைவர், பிரதமருக்கு தலைவர்.தொல்.திருமா அவர்கள் மடல்
முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை கழித்த பேரறிவாளன் சாந்தன்,முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது.
மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் ,சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் காப்பாத்த வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இத்தகையசூழ்நிலையில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென 26.8.2011 அன்று குரல் எழுப்பினார். அத்துடன் இந்திய குடியரசு தலைவர் மாண்புமிகு பிரத்திபா பாட்டில் அவர்களுக்கும், இந்திய தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன் சிங்அவர்களுக்கும் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்து இருக்கும் பேரறிவாளன் ,சாந்தன் ,முருகன் ,ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவதாக அமைந்துவிடும் என்றும் சுட்டிகாட்டி இருப்பதுடன், மரண தண்டனை கொள்கையை இந்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அம்மடல் எழுத்தபட்டுள்ளன.நாடாளுமன்ற செயலகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கும் ,தலைமை அமைச்சருக்கும் அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக