பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனைக்கெதிராக மக்களவையில் தொல்.திருமாவளவன் முழக்கம் எழுப்பினார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டுமெனவும், மரண தண்டனைக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தும் வகையில்
இன்று (2682011) நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவையின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியவாறு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முழக்கத் தாளினையும் உயர்த்திப் பிடித்தார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் உணவு இடைவெளிக்குப் பிறகு மக்களவை மீண்டும் கூடியது. பேரவைத் துணைத் தலைவர் அவையை வழிநடத்தினார். அவை தொடங்கியதும், லோக்பால் மசோதா தொடர்பாக விதி 193ன்படி விவாதம் நடைபெறும் என அறிவித்தார். அதனை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாகக் கூச்சல் எழுப்பினர். விதியின் 184ன்படி விவாதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அதற்கு எதிர்ப்பாக காங்கிரஸ்காரர்களும் எழுந்து நின்று கூச்சல் எழுப்பினர். இதற்கிடையில் தொல்.திருமாவளவன் பேரவைத் துணைத் தலைவரை நோக்கி அவையின் மையப் பகுதிக்கு உரத்து முழக்கமிட்டவாறு சென்றார். மையப் பகுதியில் நின்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முழக்கத் தாளினை அவையிலுள்ள அனைவரும் கவனிக்கும்படி காட்டிக்கொண்டே சுமார்
2 நிமிடங்கள் முழக்கங்களையும் எழுப்பினார். 'Abolish Capital Punishment!
Save Santhan, Murugan and Perarivalan!' என்று முழங்கிக்கொண்டே, அம்முழக்கத் தாளினை அவைத் தலைவருக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் காட்டினார். கடுமையாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரும் அம்முழக்கத்தாளில் எழுதப்பட்ட வாசகங்களை தத்தமது பக்கம் காட்டுமாறு கேட்டுக்கொண்டனர். அவைத் துணைத் தலைவர் அதனைப் படித்துப் பார்த்துவிட்டு இருக்கையில் அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருக்கும் பதட்டமான இச்சூழலில்
தொல். திருமாவளவன் இதனை மக்களவையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
சில நிமிடங்கள் அவையில் பரபரப்பு நிலவியது...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக