நாளை தொல்.திருமாவளவன் பிறந்த நாள் கவியரங்கம் Š கருத்தரங்கத்துடன் தமிழர் எழுச்சி நாள் விழாவாக சென்னையில் நடைபெறுகிறது


ஆகத்து 17  தொல். திருமாவளவன் பிறந்த நாளை விடுதலைச் சிறுத்தைகள் தமிழர் எழுச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். சென்னையில் தலைமையின் ஒருங்கிணைப்பில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகிறது. பி.டி. தியாகராயர் அரங்கில் மாலை 4 மணியளவில் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் ந. இளஞ்செழியன் நெறியாளுகை செய்கிறார். வடசென்னை மாவட்டச் செயலாளர் கபிலன் வரவேற்கிறார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் "தமிழ்நாட்டில் தமிழ்' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. கவிஞர்கள் கபிலன், தமிழமுதன், ரவிக்குமார், கவிமுகில், மு. ரசாக் ஆகியோர் கவியரங்கில் பங்கேற்கின்றனர்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் "தமிழர் உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்!' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. முனைவர் மு. நாகநாதன், துரை. ரவிக்குமார், பாவலர் தணிகைச்செல்வன், தி.வேல்முருகன், பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். மையச் சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வீரமுத்து நன்றியுரையாற்றுகிறார்.

இவண்

வன்னிஅரசு

2 கருத்துகள்:

Happy birthday my dear brother & GREAT LEADER!!

You sacrificed your life for us..your hard work won’t waste..Because we are experiencing & getting benefits from your hard work.
Yes…WE WILL WIN!!!

Anburaj, Pune.

17 ஆகஸ்ட், 2011 அன்று 6:06 AM comment-delete

எழுச்சித் தமிழருக்கு இது எத்தனையாவது பிறந்தநாள். வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

திருச்சி அமானுல்லாஹ்

கருத்துரையிடுக