உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிப்பு;திருமா மருத்துவமனையில் அனுமதி
உண்ணாவிரதத்தால் உடல்நிலை பாதிப்பு; திருமாவளவன் போரூர் ஆஸ்பத்திரியில்அனுமதி
பூந்தமல்லி, ஜன. 19- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இலங்கையில் போர் நிறுத்தத்தை போரை மத்திய அரசு வலியுறுத்த கோரி மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த அவரை, `போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் வற்புறுத்தினார்கள். இதையடுத்து, 4-வது நாளான நேற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
4 நாட்களாக தண்ணீர் தவிர வேறு எதையும் உண்ணவில்லை. எனவே, திருமாவளவனின் ரத்த அழுத்தம் குறைந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்டது. மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்' என்று டாக்டர்கள் கூறினார்கள்.
இதையடுத்து, அவர் நேற்று இரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 7-வது மாடியில் உள்ள `டீலக்ஸ்' அறையில் தங்கி இருக்கும் திருமாவளவனுக்கு டாக்டர் மஞ்சுநாத் தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : மாலைமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக