இலங்கையில் இருக்கும் இந்திய கைதிகள் இந்திய சிறைகளுக்கு மாற்றபடுவர் -திருமாவின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா கடிதம்
தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த ஆக்டோபர் 10 முதல் 15 ஆம் தேதிவரையில் 11பேர் கொண்ட தமிழக நாடாளுமன்ற குழுவின் ஒருவராக இலங்கைக்கு சென்றார். அங்கு வதை முகாம் முள்வேலி கம்பிக்குள் அடைக்கப்பட்ட 3.5 லட்ச தமிழர்கள் படும் துயரங்களை நேரில் பார்த்து அவர்களை முகாமில் இருந்து அவர்களது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பக்கூறியும் அதிபர் ராசபக்சே மற்றும் அவர்களது சகோதரர்களிடம் தொல்.திருமாவளவன் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தார்
1.இலங்கையில் வாழும் தமிழ் சமுகத்திற்கு உடனே அரசியல் தீர்வுகாண வேண்டும்
2.தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் படும் துயரங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
3.வதைமுகாமில் இருக்கும் தமிழர்களை உடனேவிடுதலை செய்யவேண்டும் மற்றும்
4. இலங்கையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திய கைதிகளையெல்லாம் மாற்றி அவர்களது உறவினர்கள் எளிதில் பார்ப்பதற்காகவும் ,பாதுகாப்பாக இருப்பதற்காகவும் இந்திய சிறைச்சாலையில் அடைக்கபடவேண்டும் என கோரிக்கை வைத்தார் .
அவர்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.M. கிருஷ்ணா அவர்கள் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒர் மடல் எழுதியிருக்கிறார். அதில் இலங்கையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திய கைதிகளையெல்லாம் இந்திய சிறைச்சாலைகளுக்கே மாற்றுவதற்காக இலங்கை சென்று இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒர் குழுவை இந்திய அரசு ஏற்பாடுசெய்து இருக்கிறது. இலங்கையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்திய கைதிகளையெல்லாம் மாற்றி இந்திய சிறைச்சாலைகளுக்கே அனுப்பக்கோரியும். இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் இலங்கை கைதிகளையெல்லாம் இலங்கை சிறைச்சாலைகளுக்கே அனுப்பவும் விரைவில் ஒர் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

1 கருத்துகள்:
thol.thiruma is tamil cheguevara.
கருத்துரையிடுக