திருமாவளனுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் தமிழ் இளையோர்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம்
இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நான்காவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
சிட்னியில் 21/23 Rose Crescent, Regants Park எனும் முகவரியில் அமைந்திருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு உண்ணாநிலை போராட்டத்தினை தமிழ் இளையோர்கள் தொடக்கியுள்ளனர். 24 மணித்தியாலத்துக்கு நடைபெறவுள்ள இந்த உண்ணாநிலை போராட்டத்துக்கு சிட்னியில் உள்ள அனைத்து தமிழர்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாநிலைப் போராட்த்தினை பிறருக்கும் தெரியப்படுத்துமாறும் சிட்னி தமிழ் இளையோர் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக