அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலினால் உண்ணாநிலை போராட்டத்தை கைவிட்டார்
அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆற்காடு வீராசாமி, தா.பாண்டியன். என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர்.
இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.
இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த கூட்ட முடிவில் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக இல்லை என்று முடிவெடுத்தார் திருமாவளவன்.
இந்நிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 4 ம் தேதி தமிழகம் முழுவதும் இலங்கை தேசியக்கொடியை எரிக்கப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உண்ணாவிரதத்தை கைவிட்ட திருமாவளவன் இலங்கை அரசு மீது தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பெப்ரவரி நான்காம் தேதி இலங்கை சுதந்திர கொடி எரிப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக