இந்திய அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் - திருமா (காணொளி)

10.01.09 அன்று, இந்திய அரசின் துரோகத்தனத்தை கண்டித்தும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் சென்னை புல்லா நிழற்சாலையில் மாலை 6.00 மணியளிவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் திரு.தொல்.திருமாவளவன், திரு.பழநெடுமாறன், திரு.இராமதாசு, திரு.வை.கோ. திரு.தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதாவது பன்னாட்டுப்படைகள் அனைத்தையும் தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் விடுதலைப்புலிகள். ஆனால் இலங்கை இனவெறி அரசு அப்பாவி தமிழர்கள் மீது குண்டு வீசி கொத்து கொத்தாக கொலை செய்வதை பார்த்து கொண்டு சும்மா இருக்கமுடியாது என்றும் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த கூட்டத்தில் "குற்றவாளி கூண்டில் இந்திய அரசு" என்ற தலைப்பில் எழுச்சி தமிழர் உரையாற்றினார் - எரிமலையாய் குமுறிய அவரது பேச்சு மக்களை தட்டி உசுப்பியது


அக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் பேசியதின் காணொளி

இந்திய அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

மாணவ பருவத்தில் பிரபாகரனை சந்தித்தேன் -திருமா நினைவுகூறினார்


தமிழ் மக்களின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒபந்தத்தை இந்தியா தமிழர்களின் மீது திணித்தது - திருமா


-

-
தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து,இந்திய இறையாண்மையை இந்தியாவே சாகடிக்கிறது -திருமா பகிரங்க குற்றச்சாட்டு



தமிழினத்தை அழிக்கும் களத்தில் இந்தியா பகையை மறந்து - சீனா,பாகிஸ்தானோடு நட்பு பாராட்டுகிறது - திருமா ஆவேச குற்றச்சாட்டு
-



-
வரலாற்றுக்கு முன்னும் பின்னும் பிரபாகரனை போல் மாவீரன் பிறந்ததில்லை பிறக்கபோவதில்லை - திருமா பெருமிதம்




-
என்றாவது ஒருநாள் தமிழர்களின் குற்றவாளி கூண்டில் இந்திய அரசை நிறுத்துவோம்,விசாரிப்போம்,எம்மினத்தை அழித்தொழித்த குற்றதிக்காக தண்டனை கொடுப்போம் - வெகுண்ட எரிமலையாய் திருமா




1 கருத்துகள்:

தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள், அனைவரும் காண வேண்டிய காணொளி

தொடரட்டும் உம் பணி....

11 பிப்ரவரி, 2009 அன்று 7:35 AM comment-delete

கருத்துரையிடுக