ஈழ பிரச்சனையில் அக்கறை கொள்ளாத ஆ.தி.மு.க உடன் கூட்டணி இல்லை ,காங்கிரசுடன் தனிப்பட்ட உறவு இல்லை - திருமா



திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது :

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடாமலும், விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கீழே போட வேண்டும் என்று கூறும் அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி கிடையாது.

மேலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம். நாங்கள் எப்போதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிடையாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜனநாயக முற்போக்கு கூட்டணியான தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்.

காங்கிரசுடன் தனிப்பட்ட முறையில் உறவு இல்லை ...மேலும் கூட்டணி குறித்து முடிவை தி.மு.க.தான் அறிவிக்க வேண்டும். நாங்கள் சிதம்பரம் உள்பட வட மாவட்டங்களில் 3 தொகுதிகளை கேட்போம் என்றார்.

3 கருத்துகள்:

இலங்கை பிரச்சினையில் தி.மு. க மட்டும் என்ன உண்மையான அக்கறை காட்டுகிறதா என்ன ? தோல்வியை பற்றி கவலைப் படாமல் வைகோ நெடுமாறன் கம்யூனிஸ்ட் மற்றும் விஜயகாந்த் ஆகியோரோடு கூட்டணி அமையுங்கள் வெற்றி நிச்சயம் விஜயகாந்த் கூட ரொம்ப முக்கியம் இல்லை

3 மார்ச், 2009 அன்று 4:34 AM comment-delete

வைகோ தான் அம்மாவ விட்டு வரமாட்டுராரே அப்புறம் எப்படிங்க கூட்டு வைக்கிறது

3 மார்ச், 2009 அன்று 5:29 AM comment-delete

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

7 மார்ச், 2009 அன்று 2:54 AM comment-delete

கருத்துரையிடுக