23-ல் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு திருமா அஞ்சலி
திருமாவளவன் எம்.பி. 23- தாமிரபரணியில் உயிர் நீத்தவர் களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்
நெல்லை, ஜுலை. 19
தாமிரபரணியில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதற்காக திருமாவளவன் எம்.பி. அன்று காலை நெல்லை வருகிறார். இது தொடர்பான ஆலோ சனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
நடராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்லையா பாண்டியன், நிர்வாகிகள் துரைஅரசு, ஜெயராமன், இளங்கோவன், வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆற்றலரசு பேசினார். மாநில நிர்வாகிகள் கலைவேந்தன், அரசு பிரபாகரன், முதல்வன், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை வரும் திருமாவளவன் எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, நெல்லை மாநகராட்சி 4 மண்டல சேர்மன் பதவிகளில் ஒரு மண்டலத்தை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வற்புறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசைதம்பி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக