தொல். திருமாவளவன் தனது 48வது பிறந்தநாளை காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுடன் சென்னையில் கொண்டாடினார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தனது 48வது பிறந்தநாளை காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுடன் சென்னையில் கொண்டாடினார்.
தொல். திருமாவளவன் தனது 48-வது பிறந்தநாளை சென்னை சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோர் பள்ளி மாணவ மாணவிகளுடன் உணவருந்தி இன்று கொண்டாடினார்.
தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு, மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்வலன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் இளஞ்செழியன், துணைச் செயலாளர்கள் பகலவன், சாரநாத், விடுதலைச் செல்வன், பகுதிச் செயலாளர் தயாளன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தொல். திருமாவளவன் மழை பெய்தாலும், உளவுத்துறையினர் மாநாட்டை சீர்குலைக்க நினைத்தாலும் திட்டமிட்டபடி மாநாடு இன்று நடைபெறும் என்று தெரிவித்தார்.
-

0 கருத்துகள்:
கருத்துரையிடுக