பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் வாழ்த்து


பிரபாகரன் பிறந்தநாள்: திருமாவளவன் வாழ்த்து





விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகல் கட்சி தலைவர் திருமாவளவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘’தமிழீழ தேதியத்தலைவர், தமிழீழ அதிபர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பிரபாகரன் பிறந்தநாள் ஒட்டுமொத்த தமிழர்களூம் பெருமைப்பட்டு பூரிப்படைய வேண்டிய புனிதமான நாள். அவருடைய பிறப்பு ஒவ்வொரு தமிழனையும் தலை நிமிர வைத்திருக்கிறது.

உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். ஐநாவில் தமிழர்களின் கொடி பறக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் 25 ஆண்டுகாலமாக ஆயுதம் ஏந்தி போராடி உலகை வியப்பில் ஆழ்த்தியிருப்பவர் மேதகு பிரபாகரன்.

அவருடைய பிறந்தநாளை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கொண்டாடவேண்டுமென்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று வாழ்த்தினார்...

நாளை மாவீரர் நாளில் டென்மார்க்கில் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்..



0 கருத்துகள்:

கருத்துரையிடுக