பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் - திருமா


சமிபத்தில் கைகளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய டாக்டர். தொல்.திருமாவளவன் அவர்கள் பெண்கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார் ...

ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்கால உயர் கல்விக்கு அடிப்படை ஆரம்பக்கல்வி கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களில் பலர் விழிப்புணர்வு இல்லாமல் குழந்தைகளை ஆரம்ப கல்வியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பலரது எதிர்காலம் பாழடைந்து வருகிறது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.


பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசிரியர் தாய்தான். எனவே பெண் குழந்தைகளை கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றல் ஒரு – சமுதாயமே கல்வி கற்றதற்கு சமம். கைகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.


1 கருத்துகள்:

திருமா .,
நீ தலித்துகளின் தலைவன் மட்டுமல்ல - தரணியில்
பெண் குலத்தின் தெய்வம் .........
எங்கள் வாழ்க்கை சுதந்திரத்துக்காக உன்
வாழ்க்கை சுகத்தினை இழந்த இறைவன் நீ
பகலவனை காட்டிலும் வெளிச்சமான
பகுத்தறிவு பகலவன்னும் நீ தான்
எனக்கு மட்டும் போராடுகிறாய் என்று நினைத்தேன் - இல்லை
என் உலகத்துக்கே போராடும் போராளி நீ
மாசற்ற மலருக்கு சமமானவன் தலைவா நீ

10 செப்டம்பர், 2009 அன்று 9:50 AM comment-delete

கருத்துரையிடுக