இந்திய பாராளுமன்ற உறுபினர்களுடன் எழுச்சி தமிழர் இலங்கை பயனம்


இலங்கையில் போர் முடிந்த பின்னரும் அப்பாவி தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.. இவர்களை தங்களது சொந்த இடங்களில் குடியமர்த்த பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டன..

இருப்பினும் இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு கிடக்கும் தமிழர்களின் நிலை என்ன என்பதை பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை..

இந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இந்திய நாடாளுமன்ற குழு ஒன்று இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்து, அதனை அடுத்து இன்று எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் உட்பட பத்து பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று முகாம்களை பார்வையிட உள்ளனர் ...இவர்கள் அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிந்து அறிக்கை சமர்பிபார்கள் ..

இன்று இலங்கை செல்லும் எழுச்சி தமிழரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்ட பொது "கொழும்பு செல்லும் எங்கள் குழு வவுனியா,ட்டகப்பு, திரிகோணலை ,ன்னார் போன்றகுதியில் உள்ளல்வேறு முகாம்களை பார்வையிடுவற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. அங்கு இருக்கும் தமிழர்களின் துன்பங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம். அக்டோபர் 14 ஆம் தேதி வரை அங்கிருந்து முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்போம் ..அவர்களை இலங்கை அரசு எப்போது தங்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும்,நிவாரன பொருட்கள் எந்தவகையில் பயன்பட்டன என்பதை விசாரித்து இந்த உலகத்திற்கு அவர்களின் துன்பங்களை வெளிச்த்திருக்கு கொண்டுவரும் பயணமாக இது அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.

இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக இந்த குழு கொழும்பு நகரை சென்றடைகிறது ...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக