நவம்பர் 12, ஐ .நா பேரவையில் திருமாவளவன் உரை


சிறுபான்மையினர் தொடர்பாக .நா பேரவையில் நவம்பர் 11 முதல் 13 மாநாடு ஒன்று ஜெனிவாவில் நடைப்பெறுகிறது.

இதன் தொடர்பாக திருமாவளவன் அவர்கள் திருமா.நெட் என்ற இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில்......

"சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்" என்கிற பொருளில் நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

Independent expert on minority issues என்கின்ற பொறுப்பிலுள்ள
கே மேக்டோனால்ட் அவர்கள் தனிப்பட்ட முறையிலே அழைப்புவிடுத்திருக்கிறார். அந்த அழைப்பை ஏற்று அந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.12 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் பேசிவதற்கேன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் தலித் மக்களுடைய பிரச்சனைகளை மையப்படுத்தி அதன் தொடர்பான கருத்துக்களை எடுத்துச்சொல்லவும், மத அடிப்படையிலும் மொழி அடிப்படையிலுமான சிறுபான்மை மக்களின் சிக்கல்கள் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன்.

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாக கருதுகிறேன். இந்தியாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்தப் பெருமை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது."

சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் போராடிவரும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த அவையில் பங்கேற்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக