காவல் துறையின் அத்து மீறலை கண்டித்து மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் சிறையில் அடைப்பு




சென்னை அஷோக்நகரில் இயங்கிவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுலக கட்டிடத்தை காலிசெய்யுமாறு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அந்த விஷயம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது ,இதனை அடுத்து பிரசாத் என்பவர் எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் காவல்துறையினருடன் வந்து இன்று அங்குள்ள கொட்டகையை இடித்துத் தள்ளியதோடு, பொருட்களையும் அப்புறப்படுத்தினார்.

இதனை கண்டிக்கும் விதமாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்டப்பொருளாளர் தினகரன், தி.நகர் பகுதி அமைப்பாளர் தமிழ்வாணன், துணைச்செயலாளர் தமிழ்முகிலன், கழகத்தொண்டரணி செயலாளர் பி.டி.தமிழ்கதிர், அசோக்நகர் வட்டச்செயலாளர் பெருஞ்சுடர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டனர்.



இதனை கண்டித்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையருகே கட்சியின் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமைநிலையச் செயலாளர் வன்னியரசு, வணிகரணி மாநிலத்துணைச் செயலாளர் இளங்கோ, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வீரமுத்து, தொண்டரணி மாவட்டச் செயலாளர் வவுனியன், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் இரா.சங்கு, ஆயிரம்விளக்கு பகுதி துணைச்செயலாளர் இரா.அரசு, இரா.செல்வம், பொய்யாமொழி, பிரபாகரன், முகிலன், ஜெயவேல், ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு கோயம்பேடு அருகேயுள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

இவர்களை இன்று காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது.,.

காவல் துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்து தமிழகம் முழுவதிலும் விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டத்தில் இடுபட்டனர்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் துணை செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் பெரியார் சிலை அருகே கட்சியின் பொறுப்பு செயலாளர் அப்துல் நாஷர் தலைமையில் மறியல் நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்;தில் ஆற்றலரசு தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பால்வ்ணணன், தமிழ்செழியன், விடுதலைகணல் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் பெரியார் பேருந்து நிலையம் எதிரே மாவட்ட துணை செயலாளர் மருதவாணன் தலைமையில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் எழுச்சிப்பாசறையின் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இதில் கிரிவளவன், விடுதலை செல்வன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக