திரு. தொல்காப்பியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தையார் தொல்காப்பியன் அவர்கள் 15.07.2010 அன்று இரவு 08.00 மணியளவில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை வேளச்சேரியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சினர், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறுபட்டவர்களும் அய்யாவிற்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு அவரின் சொந்த ஊரான அரியலுர் மாவட்டம் அங்கனூருக்கு 16.07.2010 அன்று நண்பகல் 12.00 மணியளவில் கொண்டுச் செல்லப்பட்டது. 
வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் வடித்தப்படி நின்று அஞ்சலி செலுத்தினர். அங்கனூர் பகுதி முழுக்க எங்கு திரும்பினாலும் மக்கள் நெரிசல்கள். ஒரு லட்சமத்திற்கும் மேலான மக்கள் அஞசலி செலுத்த திரண்டிருந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு.ராமதாசு, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழ்ச்செல்வி, செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொண்டனர். எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி தொண்டர்களின் மனதை பிழிந்து எடுத்துவிட்டது. 

காலை 11.30 மணியளவில் வீட்டின் அருகிலேயே அய்யாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்பு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினிடையே உரையாற்றிய எழுச்சித்தமிழர் அவர்கள் தான் பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு மிகவும் உற்றத்துணையாக இருந்தவர் தனது தந்தை என்றும் எப்போதும் என்னுடைய  
அறிவு கூர்மையை தீட்டிக்கொண்டே இருந்தவர்
என்றும் பேசினார்.

3 கருத்துகள்:

உம்...........! மரணத்தின் செய்தியால் மனம் நொடிந்து
தவிக்கின்றோம் நாங்கள்........................

அங்கனூர் மண்ணில்
தங்கமான செல்வத்தைப் பெற்று
தலித் இனத்தின் தலைவனாக
தமிழ் இனத்தின் குருதியாக
தமிழ் தாரைவார்த்தத் தந்தையே !
தமிழ் தொல்காப்பியரே !!

நீங்கள்.............!
விக்ருதி தமிழாண்டு விளங்கும் ஆனி 31ம் நாளில்
விண்ணூலகை விட்டு மண்ணுலகை அடைந்த
வீரத்தின் விளைநிலமே விடுதலைச்சிறுத்தைகளின்
முதல் இடமே !!

நீங்கள்.........!
மண்ணில் புதைக்கப்படவில்லை
மட்டில்லா சிறுத்தைகளை வித்தாக்கி,
மந்தை மந்தையாக உருவாக்கிச் சென்றுள்ளீர் !!

உம்...........! மரணத்தின் செய்தியால் மனம் நொடிந்து
தவிக்கின்றோம் நாங்கள்........................
இல.ஏழுமலை என்.எல்.சி

மற்றும்
ஏ.செல்வக்குமார் (எ) விடுதலைக் குமார்
க.கோவிந்தராஜன்
மு.ஜெயபால்

20 ஜூலை, 2010 அன்று 1:19 PM comment-delete

உம்...........! மரணத்தின் செய்தியால் மனம் நொடிந்து
தவிக்கின்றோம் நாங்கள்........................

அங்கனூர் மண்ணில்
தங்கமான செல்வத்தைப் பெற்று
தலித் இனத்தின் தலைவனாக
தமிழ் இனத்தின் குருதியாக
தமிழ் தாரைவார்த்தத் தந்தையே !
தமிழ் தொல்காப்பியரே !!

நீங்கள்.............!
விக்ருதி தமிழாண்டு விளங்கும் ஆனி 31ம் நாளில்
விண்ணூலகை விட்டு மண்ணுலகை அடைந்த
வீரத்தின் விளைநிலமே விடுதலைச்சிறுத்தைகளின்
முதல் இடமே !!

நீங்கள்.........!
மண்ணில் புதைக்கப்படவில்லை
மட்டில்லா சிறுத்தைகளை வித்தாக்கி,
மந்தை மந்தையாக உருவாக்கிச் சென்றுள்ளீர் !!

உம்...........! மரணத்தின் செய்தியால் மனம் நொடிந்து
தவிக்கின்றோம் நாங்கள்........................
இல.ஏழுமலை என்.எல்.சி

மற்றும்
ஏ.செல்வக்குமார் (எ) விடுதலைக் குமார்
க.கோவிந்தராஜன்
மு.ஜெயபால்

20 ஜூலை, 2010 அன்று 1:27 PM comment-delete

தோழர் அண்ணார் அவர்களுக்கு -

ஆழ்ந்த-இரங்களை தெரிவித்து கொள்கிரேன் !!!!

அப்பா -திரு. தொல்காப்பியன் அவர்களின் -கடைசி ஆசையை -(அண்ணார் திருமா -திருமணம் செய்துகொள்வது ) நெறைவேற்றுவது -அண்ணாரின் கடமை ஆகும் !!!


-த சேகர் M.E
மருதிபட்டி -அஞ்சல் /வேளச்சேரி
அரூர்

20 ஜூலை, 2010 அன்று 11:32 PM comment-delete

கருத்துரையிடுக