தலைவரின் தந்தை இயற்கை ஏய்தினார்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் இன்று (15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, இராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். கடந்த 6 மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால் (பார்க்கின்சன்) பாதிக்க்கப்பாடு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 5 ஆம் தேதியிலிருந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் திடீரென உருவான நிமோனியா தொற்றினால் நுரையீரல் செயலிழந்து செயற்கை சுவாச சிகிச்சையும் பலனின்றி இன்று இரவு இயற்கை ஏய்தினார்.

அவரது திருவுடல் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக எண்.ஆர்.62, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, இரண்டாம் நிழற்சாலை, வேளச்சேரியில் உள்ள ”தாய்மண் அறக்கட்டளை” அலுவலகத்தில் நாளை (16.07.2010) நண்பகல் வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இவண்
வன்னி அரசு
மாநிலச் செய்தி தொடர்பாளர்.

3 கருத்துகள்:

Thannigarilla thalaivanai yengalukku koduthitta thanthaiyey ungalukku yenathu semmarntha VEERA VANAKKAM!

15 ஜூலை, 2010 அன்று 12:45 PM comment-delete

என் அண்ணனுக்கு

ஆழ்ந்த அனுதாபங்கள்...

வாசிங்டன் சிவா...

15 ஜூலை, 2010 அன்று 3:37 PM comment-delete

Veera Vanakkam to Thiru. Tholkappiar who raised his son to become Great Leader who's selfless service have admired million hearts.

Dear Brother, We are with you in this Sad Moments.

15 ஜூலை, 2010 அன்று 9:55 PM comment-delete

கருத்துரையிடுக