தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு
07.07.2010 மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, சென்னை ஓட்டேரியில் அமைந்துள்ள அவரது நினைவிடமான உரிமைக் களத்தில் எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் என்றும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் சமூகத்தினருக்கு இருந்த அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறகளையும் மீறி தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன், தமிழகத்தில் சாதி ஒழிப்பின் முதன்மைப்போராளியாக திகழ்ந்தவர் என்றும் பேசினார்.
கோவையில் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டில் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் சமர்பித்த கட்டுரைகளில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயரை பதிவு செய்யவில்லை அதற்கு காரணம் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆனால் விடுதலைச்சிறுத்தைகள் புதைந்து போன உண்மைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் என்றும் பேசினார்.
இந்நிகழ்வஞ்சிலியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, தலைமைநிலைய செயலாளர் ஆர்வலன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநிலத் துணைத் செயலாளர் இரா.செல்வம், மாவட்ட செயலாலளர் வீரமுத்து மற்றும் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக