டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க! - தொல்.திருமாவளவன் கோரிக்கை


டாஸ்மாக் ஊழியர்களை
பணி நிரந்தரம் செய்க!

தொல்.திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக வற்புறுத்தி வருகின்றனர். பட்டதாரி இளைஞர்கள் தங்களுக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசு மதுக்கடைகளில் பணியில் சேர்ந்து தொகுப்பூதியம் பெற்று தங்களது குடும்பத்தினரைக் காப்பாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 35 வயதைக் கடந்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் அவர்களால் இனி வேறு வேலைவாய்ப்பையும் தேடமுடியாத இக்கட்டில் உள்ளனர். ஆகவே, அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடுமாறு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 26.8.2010 அன்று விடுதலைச்சிறுத்தைகளின் துணைநிலை அமைப்பான தொழிலாளர் விடுதலை முன்னணியின் சார்பில் சென்னையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

தொல்.திருமாவளவன்

3 கருத்துகள்:

annan tirumavalavan ,,,,,,,,super,,,thank you

12 ஆகஸ்ட், 2010 அன்று 12:20 AM comment-delete

அன்பிற்கினிய அண்ணா அவர்களுக்கு
வணக்கம் நலமறிய ஆவ
உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தோழமையுடன்
பாரி செழியன்

16 ஆகஸ்ட், 2010 அன்று 8:44 AM comment-delete

அன்பிற்கினிய அண்ணா அவர்களுக்கு
வணக்கம் நலமறிய ஆவ
உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தோழமையுடன்
பாரி செழியன்

16 ஆகஸ்ட், 2010 அன்று 8:48 AM comment-delete

கருத்துரையிடுக