2016- சட்டசபை தேர்தலில் தலித் - முஸ்லிம் கூட்டணி உருவாகும் - திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில், இப்பீரியல் விடுதியில் நேற்று(05-09-2010)மாலை 6 மணியளவில் நடபெற்றது.
3 நாட்கள் நோன்பு இருந்து எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர், ’’விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது.
தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும்.
அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது.
திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்.
எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக..., நமக்காக.. எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம் இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும்.
2016- சட்டசபை தேர்தலில் தலித் - முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை’’ என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்இஸ்லாமிய சமூகப் பெரியவர்கள், வக்பு வாரிய தலைவர் கவிஞர் அப்துல் ரகுமான், தாவூத் மியான்கான் மற்றும் கட்சியின் முன்னனி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கட்சியின் பொருளாளர் முகமது யூசப் ஏற்பாடு செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக