செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம்
செப்டம்பர் 1, சென்னை
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விவரம் ...

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனாலும் தமிழ் ஈழத்தின் கோரிக்கை இன்னும் நீர்த்து போக வில்லை.
ஈழத்தமிழர்கள் ஜன நாயக கோரிக்கையை வலி யுறுத்தவும், உலக நாடு களுக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இந்திய இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக தமிழ் ஈழ கோரிக்கை முன் வைக்கப்படவில்லை.
இலங்கையில் மறுவாழ்வு பணியை மேற்பார்வையிட எதிர்க்கட்சிகள் அடங்கிய நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை மந்திரி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். தற்போது நடந்த கூட்டத்தில் அதை மறுத்துள்ளனர்.
எனவே நாடாளுமன்ற குழுவை நியமனம் செய்ய வேண்டும். அந்த குழு பார்வை யிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கைதி களை அண்ணா பிறந்தநாளை யொட்டி செப்டம்பர் 15-ந் தேதி அன்று விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது என்றாலும் பல இடங்களில் தலித் இனத்தவர் மீது குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 1 ஆண்டில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த 50 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெற்றுள்ள நிலையிலும் காவல் துறையின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தலித் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வருவாய் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் பழி வாங்கப் படுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் அரசியல் ஆதாயத்துக்காக தலித் பெயரை பயன்படுத்து கிறார்கள். எனவே முதல்- அமைச்சர், தாழ்த்தப்பட்டோர் நலனில் சிறப்புக்கவனம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில், தேர்தல் ஆணை யத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போதிய இடங்களில் போட்டியிடும். அதாவது இரட்டை இலக்க எண்களில் போட்டியிடுவோம். தி.மு.க. கூட்டணியை வலிமைப்படுத்துகின்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு அமையும். மீண்டும் தி.மு.க. கூட்டணியே தமிழ கத்தில் ஆட்சியை கைப்பற்றும். 2011 விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என்று நாங்கள் ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் கட்ட மைப்பை வலிமைப்படுத்தி அங்கீகாரம் பெறுவது என்ற அடிப்படையில் அதை அறிவித்தோம். 2016-ம் ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் தலைமையில் மாற்று அணியை அமைப்போம்.
மேல்சபை தேர்தலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக முதல்- அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். ஆசிரியர்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறப் போவதில்லை. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ் ஈழத்துக்காக போராடக் கூடிய அவர் இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும். நட்பு தொடர வேண்டும். வட மாவட்டங்களில் வலிமை பெற தோழமை நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., வன்னியரசு, வெற்றிச்செல்வன், கலைக் கோட்டுதயம், முகமது யூசுப் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக