ஈழம் விடுதலைப் பெற வேண்டும் என்ற கருத்தியலை அடைக்காக்கிற வலிமையும் வாய்ப்பும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் "தொல்.திருமாவளவன் கவிதைகள்' என்ற நூலின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst' , வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த தொல். திருமாவளவன் உரைத் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்' ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்திலுள்ள அரங்கத்தில், 26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
பாவலர் இன்குலாப்,பாவலர் தணிகைச்செல்வன், கவிக்கோ அப்துல் ரகுமான், பாவலர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர், எழுத்தாளர் இரவிக்குமார், கவிஞர் இனிமை
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு
கருத்துரையாற்றினார்கள். எழுச்சித்தமிழர் திருமாவளன் பேசும் போது
தமிழினத்தை தலைநிமிரவைத்த போராளி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாளை இன்று உலகமே கொண்டாடி மகிழ்கிறது அவரின் பிறந்தநாளை வெளிப்படியாக வெளிச்சம் போட்டு கொண்டாடுவதற்கான வாய்ப்பில்லாத ஒரு களமாக இன்றைக்கு தமிழகம் விளங்கிக்கொண்டிருக்கிறது. எனினும் விடுதலைச் சிறுத்தைகள் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஈழம் விடுதலைப் பெற வேண்டும் என்ற கருத்தியலை அடைக்காக்கிற வலிமையும் வாய்ப்பும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உண்டு. அக்கருத்தை சிதைந்து போகவிடாமல் பாதுகாத்து முன்னெடுத்துச்செல்கிற கடமை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதற்கான கலப்பணிகளை விடுதலைச்சிறுத்தைகள் செய்து வருகின்றது என்றும் பேசினார்.
வெளியீட்டு மையம் மாநிலச் துணைச் செயலாளர் நீலத்தமிழேந்தி வரவேற்புரௌ வழங்கினார். வெளியீட்டு மையம் மாநிலச் செயலாளர் ஆதிரை நன்றியுரையாற்றினார்.
நிகழ்வை மாநிலச்செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இரா.செல்வம், சங்க தமிழன், சைதை பாலாஜு ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக