தொல்.திருமாவளவன் மிலாதுத் திருநாள் வாழ்த்து!
அண்ணல் நபி வழியில்
அறநெறிகளைப் போற்றுவோம்!
மாந்தநேயத்தைப் பரப்புவோம்!
தொல்.திருமாவளவன் மிலாதுத் திருநாள் வாழ்த்து!
இறைத் தூதர்களில் இறுதித் தூதராய்ப் போற்றப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளே மிலாடி நபித் திருநாளாக இசுலாமியப் பெருங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவன் மட்டுமே வணங்குவதற்குரியவன் என்னும் ஓரிறைக் கோட்பாட்டினை உலகுக்கு வழங்கியவர் நபிகள் நாயகம். தனிமனித வழிபாடு கூடாது என்னும் உயரிய கருத்தை மானுடச் சமூகத்திற்குப் போதித்த மகான் நபிகள் நாயகம், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் உடன்பாடு இல்லாதவரே ஆவார். எனினும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிலைப்படுத்தி அவர் போதித்த அளப்பரிய அறநெறிகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டே இசுலாமியர்கள் மிலாது விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
மனிதனை மனிதன் மதிப்பதும், மனிதனுக்கு மனிதன் உதவுவதும் மனிதநேயத்தின் மகத்தான வெளிப்பாடுகள் என மாந்தர்க்கு உணர்த்தியவர் அண்ணல் நபிகள் ஆவார். நபிகள் நாயகத்தின் இத்தகைய அறநெறிகளைப் போற்றுவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பரப்புவதும் மாந்தநேயத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகளாகும். அவரது போதனைகள் இசுலாமியச் சமூகத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் அருளப்பட்டவையாகும். அவர் வழியில் அறநெறிகளைப் போற்றுவோம்! மாந்தநேயத்தைப் பரப்புவோம்! என மிலாதுத் திருநாளில் உறுதியேற்போம். இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் மிலாதுத் திருநாள் வாழ்த்துகள்!
இவண்
(தொல். திருமாவளவன்)












0 கருத்துகள்:
கருத்துரையிடுக