தமிழகமீனவர்களைவிடுதலைசெய்யக்கோரி தொல். திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!


சிங்களஇனவெறிக்கடற்படையால்கைதுசெய்யப்பட்ட
தமிழகமீனவர்களைவிடுதலைசெய்யக்கோரி
தொல். திருமாவளவன் தலைமையில்
2000 பேர் பங்கேற்பு!

விடுதலைச்சிறுத்தைகள்ஆர்ப்பாட்டம்!


சிங்கள இனவெறிக் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 136 பேரை விடுவிக்க உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ல் இன்று (18-02-2011) காலை 10.30 மணியளவில் சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள நினைவு அரங்கம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் கலந்துகொண்டனர்





"இந்திய அரசே! உடனடியாக தமிழக மீனவர்களைக் காப்பாற்று! சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போகாதே! தமிழர்களை வஞ்சிக்காதே!' போன்ற முழக்கங்களை எழுப்பி கண்டனத்தைத் தெரிவித்தனர். இறுதியில் தொல்.திருமாவளவன் உரையாற்றியபோது, ""இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை, தமிழர்களை வஞ்சித்து வருகிறது. சிங்கள அரசுக்குத் துணை நிற்கிறது. சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுகிறார்கள், அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இதனைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை டுக்க வேண்டும்'' என்று கூறினார்.


ஆர்பாட்டத்தில் எழுச்சித்தமிழரின் உரை - காணொளி


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் வீரமுத்து, கபிலன், ந.இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப், மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இரா.செல்வம், பாவலன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக