கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.எ.ஒ) போராட்டம்: விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவு

தலையாரிகள்  போராட்டம்:
விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவு
தொல்.திருமாவளவன்  அறிக்கை


 தமிழகத்தில்  வருவாய் கிராம ஊழியர்கள் (தலையாரிகள்) தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வேண்டி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் கடந்த 16ம் தேதி முதல் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக கிராம நிர்வாக அலுவலர்களும் (வி.ஏ.ஓ) போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக இரண்டுகட்டப் பேச்சுவார்த்தை வருவாய்துறை செயலாளர் மற்றும் வருவாய்  முதன்மை ஆணையாளர் ஆகியோரால் நடத்தப்பட்டது. இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையின்போது அரசின் நிதித்துறை செயலாளரும் கலந்துகொண்டு பேசியதாகத் தெரியவருகிறது.

  கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின்போது ஆறாவது ஊதியக் குழுவில் அவர்களுக்கு உண்டான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்று  அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். அத்துடன், இரண்டுமுறை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் வாயிலாகவும் தெரிவித்தோம். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆகவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வருவாய் கிராம ஊழியர்களின் ஒற்றைக் கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை அவர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்து உதவுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


.

                                         

                                         

0 கருத்துகள்:

கருத்துரையிடுக