மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட வன்னிஅரசு சார்பில் விருப்பமனு!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட வன்னிஅரசு சார்பில் விருப்பமனு! பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம் அளித்தார்!

ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 1ஆம் தேதி முதல் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, மதுராந்தகம் அல்லது செய்யூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் ன்று கோரி, அவரது சார்ல்கட்சியின் பொதுச் செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் இன்று (3-3-2011) விருப்பமனு தாக்கல் செய்தார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விருப்பமனுவைப் பெற்றுக்கொண்டார்.

தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

1 கருத்துகள்:

தோழர் வன்னியரசு போன்ற இனமான உணர்வு உள்ளவர்கள் -சட்ட மன்றம் செல்ல வாழ்த்துக்கள் !!!

த சேகர் ME,
மருதிபட்டி/Velachery
அரூர் -வட்டம்

4 மார்ச், 2011 அன்று 5:36 AM comment-delete

கருத்துரையிடுக