திருமாவின் மகளிர் தின வாழ்த்துக்கள்

உச்ச, உயர் நீதிமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு வேண்டும்! மகளிர் நாளையயாட்டி  தொல்.திருமாவளவன் கோரிக்கை!


லக மகளிர் நாளின் நூற்றாண்டு இது. இந்த நேரத்தில் நீதித் துறையின் உயர் அமைப்புகளான உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் குறைந்தது 33 விழுக்காடு மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடங்களை மகளிருக்கு ஒதுக்கியது போல நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிலும் சரிபாதி இடங்களை மகளிருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீண்ட காலமாகவே விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து பாடாற்றும் என இந்த நன்னாளில் உறுதி கூறுகிறோம்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்குப் பாதுகாப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருப்பதைப் போல, மகளிருக்கும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றிட வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் அந்தஅளவுக்கு சிறப்பானவையாக இல்லை என்பதை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மகளிர் மீதான வன்முறை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மகளிர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனது சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த புரட்சியாளர் அம்பேத்கர் வழிநின்று பெண்களின் சமத்துவத்தை நிலைநாட்ட விடுதலைச் சிறுத்தைகள் போராடும்.

மகளிர் நாளின் நூற்றாண்டு தினத்தில், "ஈன்று புறம்தந்து சான்றோனாக்கும்' எம் தாய்க்குலத்தை வணங்கி வாழ்த்துகிறோம்..

இவண்
                                  
(தொல். திருமாவளவன்)

1 கருத்துகள்:

வாழ்த்துக்கு நன்றி சகோ

8 மார்ச், 2011 அன்று 10:22 AM comment-delete

கருத்துரையிடுக