விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம்: தொல்.திருமாவளவன்
சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் முகமது யூசப் அறிமுகப்படுத்தும் கூட்டம், அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில் பாமகவுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கியுள்ளது என்றார்.
1 கருத்துகள்:
Very good bright future starting this election congratulation all VCK candidates and all Thaliths.
Gunamankalam V. Prabakaran,
Singapore.
கருத்துரையிடுக