புதுச்சேரியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி.
நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
தி மு க - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்து தேர்தலை சந்திக்க விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விரும்பியிருந்த நிலையில் அதற்கான சூழல் ஏதுவாக அமையவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நெருங்கிக்கொண்டு இருக்கின்ற இந்த நெருக்கடியான நிலையில் புதுச்சேரி மாநில விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்டக் குழு, கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று 22.3.2011 மாலை சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது.
இக்கூட்ட்டதில் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பின் வருமாறு:
1, வில்லியனூர் - தேவ. அங்காளன் என்கிற தேவ.பொழிலன்
2, உசுடு - பெரு. அரிமாதமிழன் என்கிற அரியபுத்ரி
3, உழவர்கரை - செலவ. நந்தன் என்கிற நடராஜன்
4, மணவெளி - ப இளவரசன் என்கிற ராஜ்குமார்
5, ஏம்பலம் - தமிழ்வளவன் என்கிற ராஜேந்திரன்
6, திருபுவனை - அ. கா. விடுதலை செல்வன் என்கிற பத்மநாபன்
7, மண்ணாடிப்பட்டு - பூபாலன்
8, நெட்டப்பாக்கம்- பொன் .நா .சிவந்தவன்
9, நிரவி திருபட்டினம் - ந. கு. செலவ சுந்தரம்
10,. நெடுங்காடு - வீ தமிழரசி
11,. திருநள்ளார் - தம்பி தேவேந்திரன்
12,. உப்பளம் - திருக்குமரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக