சாதிவெறியர்களை உடனே கைது செய்ய கோரி ஆர்பாட்டம்

கடலூர் மாவட்டம் கம்பளிமேட்டில் நடந்த தலித் வாலிபர் படுகொலையை கண்டித்தும், திண்டுக்கல் மாவட்டம் பரளிபுதூரில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று (03.03.2011)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





இவ்வார்பாட்டத்தில் பேசிய எழுச்சித்தமிழர்

 திண்டுக்கல் மாவட்டம் பரளிபுதூர் என்ற கிராமத்தில் 14/2/2011 தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கொடி ஏற்றபட்டதற்காக சாதி வெறியினர் 20 லாரிகளில் வந்து 100 குடும்பமே வசிக்கும் பகுதிக்குள் புகுந்து  100 வீடுகளை முற்றிலும் சேதப்படுத்தியும் ,அங்கு இருந்த ஆடு-மாடுகளையும் எரித்து கொன்றுள்ளனர்,மேலும் 20 க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை எரித்துள்ளனர்.

இதுபோல கடலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் ஆண்டுதோறும் மாசிமாதம் என்ற ஊர் திருவிழா மிக சிறப்பாக வழிபடுவார்கள் குலதெய்வத்தை பல்லக்கில் ஏற்றி கடலில் கொண்டுபோய் கரைப்பார்கள் .அது போல இந்த ஆண்டும் தலித் மக்கள் குலதெய்வத்தை பல்லக்கில் ஏற்றி கொண்டு ஊர் தெருவான தியாகவள்ளி என்னும் இடத்தில் தலித்துகள் செல்ல, எதற்கட உங்களுக்கு சாமி வழிபாடு ? என்று சொல்லி அங்கு வந்த அனைவரையும் ஆயுதங்களை வைத்து தாக்கியுள்ளனர். கம்பளிமேடு சுப்பிரமணியன் என்ற இளைஞர்  சம்பவ இடத்திலே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பலர் படும் காயங்களோடு அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.  தலித் மக்களின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமைகளை கண்டித்தும், சாதிவெறியர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதுசெய்யபடவேண்டும் என்றும்

தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கொடி பறந்ததிற்காகவும் ஒரு திருமண விழாவில் எமது கட்சியினர் விளம்பரப் பதாகைகள் வைத்த ஒரே காரணத்திற்காக நத்தம் வட்டத்திலுள்ள பல ஊர்களைச் சேர்ந்த சாதிவெறியர்கள் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியுள்ள உண்மைக் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

நத்தம் வட்டத்தில் தேநீர்க் கடைகளில் இன்னமும் இரட்டைக் குவளை முறை நீடித்து வருகிறது. பரளிபுதூருக்கு வந்து செல்லும் பேருந்துகளில் தலித்துகள் சரிசமமாக உட்கார்ந்து செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை. கலவரத்திற்குக் காரணமான உள்ளூரைச் சேர்ந்த சாதி வெறியர்கள் இன்னமும் சுதந்திரமாகவே நடமாடி வருகிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் குடிநீர்த் தொட்டியை உடைத்தும், மின்மாற்றிக் கம்பங்களை தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளதால் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, தமிழக அரசு நத்தம் பகுதியைத் தீண்டாமைப் பகுதியாக அறிவித்து பேருந்து மற்றும் தேநீர்க் கடைகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்த வேண்டும். மற்றும் கம்பளிமேடு சுப்பிரமணியன் குடும்பத்திற்கு அரசு வேலை வாய்ப்பும் உயிர்இழப்பீடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 


ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை செயலாளர் இரா.செல்வம், மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தனி செயலாளர் பாவலன், மத்திய சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக