தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்: திருமாவளவன் திறந்து வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரட்டைமலை சீனிவாசன் பிறந்த கிராமமான கோழியாளம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 7-ந்தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை கொண்டாட வருகின்றனர்.  
 
அதே போல் ஜூலை 7-ந்தேதியான நேற்று கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவ சிலை நினைவு தூண், மணிமண்டபம் ஆகியவற்றை விடுதலை சிறுத்தைகள் அமைத்திருந்தனர். இரட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்ள மணிமண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
 
ஜூலை 7 இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அரசை பாராட்டுகிறேன். அயோத்திதாசன், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோருக்கு அரசு மணி மண்டபம் எழுப்ப வேண்டும்.
 
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்தை தமிழ்நாட்டு மக்களிடம் பெற்று ஐநா மன்றத்திற்கே அனுப்பி வைக்க உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், கலைவடிவன், போறிவாளன், எழிலரசு, தென்னவன், பூவிழி, மேனகாதேவி கோமகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொய்யாமொழி, பிரகாசு நன்றி கூறினர்.
***

நிகழ்வில் தலைவரின் உரை - காணொளியாக

-


0 கருத்துகள்:

கருத்துரையிடுக