வழக்கு நிலுவையிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்தில் அத்துமீறல்! காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல் – கைது

சென்னை, அசோக் நகர், 100 அடிச் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அழுவலக இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை காவல்துறையினர் உதவியுடன் ஒரு பிரிவினர் அந்த இடத்துக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர். இதனை அப்பகுதிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். ஆனால் சம்பந்த்தப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக இருந்ததோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களையும் விரட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து தலைவரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமையில், வன்னிஅரசு , வெற்றிசெல்வன் , அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கைது செய்து எம்.ஜி.ஆர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் வைத்துள்ளனர். 

இதுபோல் சென்னை மாநகரெங்கும் ஆங்கங்கே விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக