மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வீரவணக்கம்



மஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர்களின் மீது காவல் துறையினர்  நடத்திய வெறியாட்டத்தால் விக்னேஷ் உட்பட 17 பேர் தாமிரபரணி நதியில் முழ்கி இறந்தனர்,அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23  ஆம் நாள் பல்வேறு  தலித் இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் தாமிரபரணி நதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் ஜூலை 23 அன்று மாலை 3 மணியளவில் நுற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச்சென்று அஞ்சலி செலுத்தினர்.ஓடும் நீரில் மலர் வளையம் வைத்து உதிரி பூக்களை அள்ளித்தூவி அஞ்சலி செலுத்திய விடுதலைச்சிறுத்தைகள் அந்த நதிக்கரையிலே ஒரு நிமிடம் அமைத்து காத்து அகம் வணக்கம் செலுத்தினர்.இந்நிகழ்வில் நெல்லை மாவட்டச்செயலாளர்கள் கார்த்திக்,செல்லபாண்டி,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தமிழினியன்,கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன்
மாவட்ட பொறுப்பாளர்கள் நெல்லை ஜீவா ,தென்வலவன்,ஆகியோரும் மாநில பொறுப்பாளர்கள் பெ.ஆற்றலரசு, கலைவேந்தன், பாவரசு, கனியமுதன், செல்லபாண்டி, இன்குலாப், கோவில்பட்டி இளஞ்சேரன், சுடர்மொழி ஆகியோரும் மற்றும் ஒன்றிய வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக