பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் திருமா







இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கி தமிழகம் முழுமையும் நடைபெற்று வருகிறது. சென்னை பெருநகரத்தில் இன்று  நாளாவது நாளாக தொடர்ந்து   மேண்மையாளர் தொல்.திருமாவளவன் இன்று (20.07.2011) நண்பகல் ஒரு மணியளவில் ஈ.வெ.ரா சாலையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி வாசலில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கையை வழங்கி பரப்புரை மேற்கொண்டார்.

ஈழத்தமிழர்கள் நிலைமையை விளக்கியும், இனபடுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டிய தேவை  குறித்தும் ,பதிவு செய்யப்பட்ட துண்டறிக்கைகளை மாணவர்களிடம் வழங்கி அவர்களின் ஆதரவை திரட்டினார்.

மாணவர்கள் திடிரென நூற்றுக்கணக்கில் குழுமினர் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று ,மாணவர்கள் கையொப்பம் இட்டனர்.அதே வேளையில் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்களிடம் மாணவர்கள் தங்களின் பாடபுத்தகத்திலும் ,குறிப்பிடுகளிலும் வாழ்த்து கையெழுத்துகளை பெற்றனர்.(autograph) ஈழம் வெல்லும், வாழ்க மேதகு பிரபாகரன் என்றெல்லாம் எழுதி மாணவர்களுக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வாழ்த்து கையெழுத்திட்டார்.

கலைஞர் தொலைகாட்சியில் இந்நிகழ்வை பதிவு செய்ததுடன்

இது குறித்து எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் நேர்காணல் செய்த்தனர்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகமெங்கும் சுமார் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையில் இடுப்பட்டு வருகிறது. அதற்கு ஒத்துழைக்கும் வகையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் இருந்து சுமார் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறுவதென திட்டமிட்டு இயக்கத்தை நடத்தி வருகிறோம் என்றும் அமெரிக்க,இங்கிலாந்து,மற்றும் ஐரோப்பா நாடுகள் ராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக அறிவித்துள்ள நிலையிலும் இந்திய அரசு மவுனம் சாதிப்பது வேதனை அளிக்கிறது என்றும் இந்திய அரசு இத்தகைய தமிழர் விரோத போக்கை கைவிட்டு தமிழீழத்தைஅங்கீகரிக்கவும், ராஜபக்சே கும்பலை தண்டிபதற்கு அனைத்துலக சமூகத்தை வற்புறுத்த வேண்டும் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கேட்டு கொள்கிறது என்றும் கலைஞர் தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

வழக்கம்போல் இன்றும் காவல்துறை கையொப்ப இயக்கத்தை மேற்கொண்ட விடுதலைச்சிறுத்தைகளை சுற்றி சூழ்ந்து கொண்டனர் காவல்துறையினரை பொருட்படுத்தாமல் கல்லூரி முதல்வரையும் கண்டுகொள்ளாமலும் மாணவர்கள்  தீவிர ஆர்வத்தோடும் ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்கின்ற  உள்ளுணர்வோடும் பெருவாரியாக கையொப்பம் இட்டனர்.

இந்த கையொப்ப இயக்க நடவடிக்கையின்போது  எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுடன் முன்னணி பொறுப்பாளர்கள் சைதை பாலாஜி,இரா.செல்வம், எழில் இமயன், சேத்துபட் இளங்கோ,அழகுமுத்து,தமிழ்குமரன் மற்றும் வட்ட,நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக