பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் திருவண்னாமலையில் ஆர்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (22.08.2011) திருவண்னாமலையில் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் க.மோகன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் ச.நியூட்டன் வரவேற்றார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மேத்தாரமேசு, இரா.தனராசு, கோ.சிவக்குமார், மு.சின்னப்பையன், ஜெயவிந்தியராஜ், வெற்றிச்செல்வி, முத்து, சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் வெற்றி முரசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். அரசியல் குழு மாநில செயலாளர் தோழர் தலையாரி அவர்கள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கங்களை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக