தலையில் இடி விழுந்த செய்தி இது -திருமா

மத்திய அரசின் மசோதா தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலையில் விழுந்த பேரிடி என்று தொல். திருமா வளவன் கூறினார்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான மசோ தாவில் சமூகநீதிக்கு எதிரான சரத்துகள் சேர்க்கப்பட்டதைக் கண்டித்தும், சுதர்சன நாச்சியப் பன் தலைமையிலான நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரை சிபாரிசுகளை இணைத்தும் காலம் தாழ்த்தாமல் இந்த மசோ தாவை, இந்தக் கூட்டத் தொடரி லேயே நிறைவேற்றி கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காகவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (24.2.2009) காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் நடைபெற்றது.


தொல். திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் இட ஒதுக்கீட் டில் மத்திய அரசு தேவையற்ற பல குழப்பங்களைச் செய்துள்ளது. ஏற்கெனவே உள்ளதிலேயே கை வைத்துவிட்டது மிகுந்த வேதனை அளிக்கிற ஒரு செயலாகும்.

தலையில் இடி விழுந்த செய்தி இது

ஏறத்தாழ 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை மத்திய அரசு உரு வாக்கியிருப்பது ஏழை, எளிய மக்களின் தலையில் இடி விழுந் ததைப் போன்ற ஒரு செயலாகக் கருதுகின்றோம்.

இதுபோன்ற கருத்து எதிர் காலச் சந்ததியினரை மிகப்பெரிய கொடுமையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி யாகும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

எம்.பி.க்களும் வற்புறுத்தவேண்டும்

தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருந்து இட ஒதுக்கீட்டில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வரக்கூடிய இந்த ஆபத்தை நாடாளுமன்றத்திலே எடுத்துச் சொல்லி தடுத்திட வேண்டும். இதிலே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

எழுச்சி தமிழர் இவ்வாறு உரையாற்றினர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக