இயக்குநர்சீமான், கொளத்தூர் மணி,விடுதலை செய்ய கோரி 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
ஈழத்தில் மடியும் நமது தமிழின சகோதரர்கள் மீதான இன படுகொலையை நிறுத்தகோரி தமிழகத்தில் என்றுமில்லா எழுச்சி பொறி கிளம்பிஉள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு , ஈழத்திற்கு அதரவாக பேசிவருகிற அனைத்து இன உணர்வாளர்களையும் முடக்கும் விதமாக இயக்குனர் சீமான், பெரியார் திராவிடகழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் 26 விடுதலை சிறுத்தைகள் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கிவிட்டதால் ஈழ பிரச்சினையை முன்னிலை படுத்தாமல் தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் ஒதுங்கி நிற்கின்ற இவ்வேளையில் , ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த 316 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.. இவர்களில் 26 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர்...
ஈழ பிரச்சனையில் கூட்டணி நிலைகளையும் கடந்து தொடர்ந்து போராடி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் தேர்தல் பணிக்குழு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர்சீமான், கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் ஆகியோரை விடுதலை செய்ய கோரி, தமிழகம்முழுவதும் வருகிற 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2 கருத்துகள்:
thanks thiruma anna
As per our tamil youths view, Now you are not a leader for some part of peoples, you would be a leader for whole Tamil people who are suffering all over the world.
Seemanin Thozar, Methagu.Thalaivarin(Prabakaran) Anbu Thambi.
kinldy try to get back seeman,mani and other leaders and our thozarkal
Ilaigarkalin thalaivan
Vaalka VC
Valarka Tamil Makkal,
Malarka TamilEelam.
Rajkumar
Kuwait
nesamraj@gmail.com
Thanks Raj for your comments
கருத்துரையிடுக