தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா - திருமாவளவன்


முதலமைச்சர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை சந்தித்து பேசினார்.
சுமார் 11/2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, இருவரும் தொகுதிப்பங்கீடு குறித்து பேசினார்கள். திருமாவளவனுடன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு ஆகியோர் வந்திருந்தனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தபின், வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,


தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றுள்ளது.


பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தனித் தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.


தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதலமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார்.
தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவ கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை முதலமைச்சர் கருணாநிதி அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.


கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சியோடு தேர்தலை சந்திக்கிறோம்.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது. எங்களை அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு டாக்டர் ராமதாஸ் அழைக்கவில்லை. பா.ம.க.வுடன் வர சூசகமாக அவர் அழைத்தார். நாங்கள் தற்போது தி.மு.க.வுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசிவருகிறோம். அணிமாறுவது குறித்து எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை.


சிதம்பரம் தொகுதியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகளும் தனித்தனி அணியில் நின்று போட்டியிட நேரிட்டால், எங்களுக்குள் போட்டிதான் இருக்குமே தவிர, மோதல் இருக்காது’’ என்று தெரிவித்தார்.


ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும். இலங்கை தமிழர்கள் வாழ்விற்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது.


சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, பிரதமரை சென்று சந்தித்தது, மனிதச்சங்கிலி நடத்தியது போன்றவற்றில் முதலமைச்சர் கருணாநிதி முன் நின்றார்.


இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.க.வுடன் தேர்தல் உறவு வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிராக பேசியவர் ஜெயலலிதா.


ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒருநாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அ.தி.மு.க. நேர் எதிரான கட்சி.
அ.தி.மு.க. கூட்டணியில் சேராதவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது.

ஆளும் கட்சி தி.மு.க.வுடன் இணைந்து, இலங்கை பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்த முன்னெடுத்து செல்வோம்.
தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு, எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பா.ம.க.வுக்கு அழைப்பு

விடுத்தோம்.
அந்த தீர்மானத்தையும் விலக்கிக்கொண்டு, நேற்று இரவு நீண்ட நேரம் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினேன். அப்போது, தோழமை உரிமையுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தேன்.
ஒரே அணியில் இருந்தால் சமூக எழுச்சியை வளர்க்க முடியும் என்று அப்போது நான் கேட்டுக்கொண்டேன். எங்கள் கோரிக்கையை புறம்தள்ளாமல், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி கூறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்’’ என்று தெரிவித்தார்.

3 கருத்துகள்:

தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் மட்டுமல்ல தமிழ் இனத்தின் எதிரி செயலலிதா என்பதில் ஐயமில்லை.

கருணாநிதி தமிழினத் துரோகி! என்பதையும் தமிழர்கள் சந்தேகம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஆறு மாதமாக அவரின் பேச்சும் செயல்பாடும் முழுமையாகவே அவரை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக அவரின் பேச்சு, நான் சாதாரண துரோகி அல்ல “பக்கா துரோகி” என்பதை பிரகடனப்படுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. வோடு தேர்தல் பணியாற்றுவதற்கும் காங்கிரசோடு தேர்தல் பணியாற்றுவதற்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை. மொத்தத்தில் தமிழினத்தை பிரித்தாலும் சூட்சியில் கருணாநிதி வென்றுவிட்டார் என்றே தோன்றுகிறது.

கருணாநிதி கொள்கையாளர் அல்ல அவர் தமிழின கொலையாளர். தமிழினம் கருணாநிதிக்கு எப்போதுமே பலியாடுதான்.

அன்பான தமிழின உறவுகளே! கருணாநிதியை நம்பி இந்த தமிழினம் ஏமாந்தது போதாதா?

கருணாநிதி குடும்பத்தை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்துவதில்தான் தமிழினத்தின் மானம் அடங்கியுள்ளது என்பதை உணருங்கள்...

சிந்தியுங்கள்... செயல்படுங்கள்..

24 மார்ச், 2009 அன்று 10:54 PM comment-delete

எதிரியைவிட துரோகி கொடியவன்,
ஜெ தன் சொந்த வாயாய் தனது உண்மை நிலையை வெளிப்படுத்தியவர்.
கருணாதியோ ஈழத்தவர்களுக்கு தீங்கான ஆயிரம் பாதகங்களுக்கு உடன் இருந்தவர்.
அபயம் என்று நம்பி இருந்தவனின் துரோகத்தனத்திற்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை.
இந்த நரியைத் தோற்கடிப்பதே தமிழ் உணர்வாளர் அனைவரதும் கடமையாக வேண்டும்.

புலிதன்னைக் கொல்லப் போகின்றது என்று இந்த நரி சொல்லவில்லையா?
வை கோவை விரட்டி கட்சி உரிமையை தன் குடும்பத்திற்கு சொந்தமாக்க, ஈழத்தின் விடிவையே அன்று கழுகேற்றியவன் இந்தக் கயவன்.
இன்னும் சொன்னால் தாய் மானம் கூட அரசியலுக்கு கப்பம் கொடுத்து வெற்றி பறிக்க முயலும் இழிந்த மனிதப் புளு,

25 மார்ச், 2009 அன்று 2:28 AM comment-delete

தமிழன், ஒன்னு இந்தியாவில் இருந்து முழூமையாயாக வெளியே வரவேண்டும் இல்லை தன்னாட்சியாக செயல்படவேண்டும்
தனக்கென்று முப்படை, ஆயுதம், இந்தி ஆதிக்கம் இந்திவார்தை இல்லாத தமிழகமாக திகலவேண்டும், ஒரு இந்தி மாநிலத்தில் என்றாவது தமிழை எந்தவழியிலாவது அனுமதிப்பார்களா, அப்படியிருக்க இந்தியை மட்டும் இறையாண்மை, தேசியம் என்று பொய் சொல்லிநம் மேல் திணித்துகொண்டுயிருக்கிறார்களே அது எந்த விதத்தில் நியாயம் மேல், அன்று இந்தியை எதிர்க்க அண்ணாதுரை, பெரியார் போன்ற உன்னத தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் இன்று தமிழன் தன் இனத்தை காப்பாற்றகூட திராணியில்லாமல் புலம்பிகொண்டுயிருக்கிறான்
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஒரே வகைதான்
இந்தியா மறைமுகமாக தமிழை அழித்துகொண்டு வருகிறான்
இலங்கை தமிழைனை அழித்துகொண்டுயிருக்கிறான்
ஒருத்தன் கருப்பா பயங்கரமா இருக்கான்
இன்னொருத்தன் பயங்கர கருப்பா இருக்கான்

26 மார்ச், 2009 அன்று 12:23 AM comment-delete

கருத்துரையிடுக