சித‌ம்பர‌ம் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிடுவது உறு‌தி-திருமாவளவ‌ன்


நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் சித‌ம்பர‌ம் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிடுவது உறு‌தி'' எ‌ன்று விடுதலை சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் உறு‌தி‌ப்பட கூ‌றினா‌ர்.

விடுதலை சிறுத்தைகள் கூட்டணி பற்றி கவலைபடாமல் ஈழ தமிழர்பிரச்சனையில் ஒரு நிலையை எடுத்துள்ளது ."நாம் தமிழர் நடைபயணம்" சாதிமத வேறுபாடு ,கட்சி கொடி மாறுபாடு,தனிநபர் முரண்பாடு இவற்றை மறந்து நாம் கைகோர்த்து இன மானம் காப்போம், ஈழம் மீட்போம் என்ற முழகங்களோடு நாம் தமிழராய் இனைய வேண்டும் என்று மக்களை தட்டி உசுப்புகிற போராட்டமாய் வலுபெற்று பல லட்ச கிராம மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது ..

விடுதலை சிறுத்தைகள் ஈழ பிரச்சனைக்காக பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது 370 கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டு சிறையில் உள்ளானர் அதில் 18 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது ...பள்ள பட்டி ரவியில் தொடாங்கி ஸ்ரீதர் வரை எத்தனையோ சிறுத்தைகள் வீரசாவை தழுவி ஈழசுடறாய் மாறி போனார்கள்...கடலுரை சார்ந்த தம்பி ஈழவளவன் ரிலையன்ஸ் டவரிலிருந்து குதித்து கை முறிந்த நிலையில் உள்ளார்

இத்தனை இழப்புகளுக்கு மத்தியில் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் ...எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் கவலை எல்லாம் தேர்தல்கவனத்தில் தமிழகத்து கட்சிகள் ஈழ பிரச்சனையை மறந்து விடுவார் என்பது தான் அதற்குள் எத்தனயோ உயிர் இழப்புகள் அங்கு ஏற்பட்டுவிடும்...தேர்தல் காலத்தில் மத்திய அரசாங்கம் எந்த அதிகாரமும் எடுக்ககூடாது என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை எனவே மத்திய அரசானது ஈழபிரச்சனையில் உடனே தலையிட வேண்டும் ...


இந்த சூழ்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை கைபற்றி ஈழபிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொறுப்பு விடுதலை சிறுத்தைகளிடம்உள்ளது . ஏற்கனவே கூறியது போல இந்த தேர்தலில் சிதம்பரம் உ‌ள்பட 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் எ‌ன்று‌ம் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி எ‌ன்றா‌ர் திருமாவளவ‌ன்.

நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் கூட்டணி குறித்து பேசுவதற்கு குழு அமைப்பது பற்றியும் நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் எ‌ன்று‌ம் அப்போது பல முடிவுகளை எடுக்க உள்ளோம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் திருமாவளவ‌ன்.

1 கருத்துகள்:

Deposit izhappadhum uruthi.

6 மார்ச், 2009 அன்று 4:55 AM comment-delete

கருத்துரையிடுக