தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற நான் தயார் : திருமா

லங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சென்னையில் பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,

இலங்கையில் அப்பாவி மக்கள் செத்து மடிகின்றனர். உலக நாடுகள் வேடிக்கை பார்க்கிறது. மனித நேயம் இல்லாத ராஜபக்சே, கொடூரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் போர் நிறுத்தம் செய்யச் சொல்லியும், ராஜபக்சே கேட்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை, தலைக்கு மேல் போய்விட்டது. சிங்கள வெறியர்கள் பேச்சுவார்த்தைக்கும், போராட்டத்தை நிறுத்துவதற்கும் முன் வரவில்லை. போராட்டத்தின் வேகத்தை நசுக்கலாம். ஆனால், முற்றிலும் அழித்து விட முடியாது. பிரபாகரன் தலைமையில் இந்தப் போராட்டம் தொடரும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை கையில் எடுத்து நமது அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர்.

என்னை இனத்துரோகி என்கின்றனர். இரண்டு தொகுதிகளையும் விட்டுட்டு தி.மு.க., கூட்டணியிலிருந்து நான் வெளியேறத் தயார். அதேபோல் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., ம.தி.மு.க., வெளியேறத் தயாரா? அவர்கள் தான் பச்சைத் துரோகிகள். இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் பிரபாகரனின் உயிருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது.

இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தில் நாம் தனித்து நிற்போம். எந்த கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று நான் வலியுறுத்தினேன். தேர்தலில் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணிக்கு சென்றுவிட்டன என்றார்.


...இக்கூட்டத்தின் காணொளி...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக