பொதுவேலை நிறுத்தம்: அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருமா
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நாளை நடைபெறும் பொதுவேலை நிறுத்ததிற்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தேர்தலைக் கூட பொருட்படுத்தாமல், முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அழைப்பு விடுத்துள்ளது ஆறுதலான விஷயம். வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படும் வகையில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் பொது வேலைநிறுத்ததில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
****
0 கருத்துகள்:
கருத்துரையிடுக