செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளும் - அதிரடி பதில்களும்
எழுச்சி தமிழரின் செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளும் - அதிரடி பதில்களும்
ப:- இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவான போது தனி மாற்று அணி தேவை என்று சொன்னோம். அதற்கு ம.தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் முக்கியத்துவம் தரவில்லை. அப்படி ஒரு அணி அமைந்திருந்தால் அந்த அணியில் விடுதலை சிறுத்தைகள் இருந்திருக்கும். தி.மு.க.வுக்கு மாற்றாக நாங்கள் அ.தி.மு. க.வை ஏற்க முடியாது. கொள்கை ரீதியாக விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரானவர் ஜெயலலிதா. எனவே தான் நாங்கள் தி.மு.க. அணியில் இடம் பெற்றோம். இருந்தாலும் முதல்- அமைச்சருக்கு எதிரான அணியினருடன் சேர்ந்து போராடி வந்தோம். அப்படி இருந்தாலும் தி.மு.க. அணியில் நாங்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.ஈழ அதரவு கூட்டணியை உருவாக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தேன்.அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளுக்கு மாற்று சக்தியாக ஈழ பிரச்சனையை முன்னிறுத்தி போராடும் கட்சிகள் இணைந்து தேர்தல் கூட்டணி உருவாகவேண்டும் என்று முயற்சிகள் செய்தோம் அதற்கு பா.ம.க வும் சரி, ம.தி.மு.க வும் சரி சரியான ஒத்துழைப்பை தரவில்லை ஈழ அதரவு கூட்டணியை உருவாகாமல் போனார்கள் என்ற குற்றசாட்டை நான் அவர்கள் மீது வைக்கிறேன்..அப்படி ஒரு கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தான் விடுதலை சிறுத்தைகள் விரும்பியது.அந்த வாய்ப்பு இல்லாமல் போன பட்சத்தில் நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம் அதில் தொடர்கிறோம்.
ப:- மாநில உரிமைகள் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு, சேது சமுத்திர திட்டம், தலித் இடஒதுக்கீடு, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை முன் நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்......
****
****
1 கருத்துகள்:
we TRUST Ezhichi Thamizhar.... he is the one and only The TRUE person in Tamizh Nadu to fight for the thamizh ezham and for the tamizh people
கருத்துரையிடுக