திமுக சின்னத்தில் போட்டியிடபோவதில்லை: திருமா
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வேளச்சேரி தாய்மண் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
* பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும்.
* விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்யும் முழு அதிகாரம் தலைவருக்கு வழங்கப்படுகிறது.
* அம்பேத்காரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ந் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் விருதுகள் வழங்கும் விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
2 கருத்துகள்:
திமுக சின்னத்திலேயே போட்டியிடுவதுதான் நல்லது
To Thiruma,
i m srithar from mumbai.
i have a great opinion about u.
but why u join with congress aligns.
u r one of the leaders like (seema).v r the followers..
take a good action. v r waiting.
srithar (VIZHITHEZHU IYAKKAM,MUMBAI)
09987379815
கருத்துரையிடுக