தொல்.திருமாவளவன் வேட்பு மனுதாக்கல் எப்போது ?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டி இடுகின்றார். தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் எழுச்சி தமிழர் திரு மனுதாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் நிலவுகிறது .

இந்த நிலையில் ,இன்று வாண்டையார் அவர்களை சந்தித்து திருமாவளவன் அதரவு கோரினார்..வாண்டையார் ஏற்கனவே தி.மு.க கூட்டனிக்கு அதரவு தெரிவித்த நிலையில் இன்று திருமாவளவன் அவர்கள் சந்தித்ததின் விளைவாக அனைத்து மூவேந்தர் வாண்டையார் சமூகத்தினரும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்று தெரிகிறது.மூவேந்தர் வாண்டையார்கள் சிதம்பரம் தொகுதியில் கணிசமாக இருப்பதனால் திருமாவளவன் அவர்களின் வெற்றி உறுதியாகி உள்ளது ..



நாளை மறுநாள் (22.04.09) செவ்வாய் கிழமை , அரியலூரில் வேட்புமனு தாக்கல் செய்வார்.மாலை அங்கு நடக்கும் பொது கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகின்றார்...

நாளை சென்னையில் பெரியார் திடலில் ஈழ தமிழர்களை பாதுக்காக கோரி பொது கூட்டமும் நடை பெறுகிறது ....

*****************************************************************************************

1 கருத்துகள்:

உங்க பதிவு மிக அருமை ...

After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it

21 ஏப்ரல், 2009 அன்று 3:51 AM comment-delete

கருத்துரையிடுக